சனி, 31 மார்ச், 2012

பார்த்த முதல் நாளே - பரவசபடுத்தும் பாடல்


பார்த்த  முதல்  நாளே 
உன்னை  பார்த்த  முதல்  நாளே 
காட்சி பிழை  போலே 
உணர்ந்தேன்    காட்சி  பிழை  போலே 
ஒரு  அலையை  வந்து  எனை  அடித்தாய் 
கடலாய்  மாறி  பின்  எனை  இழுத்தாய் 
என்  பாதகை  தாங்கிய 
உன்  முகம் உன்  முகம் 
என்றும்  மறையாதே  

[Male]
காட்டி  கொடுக்கிறதே 
கண்ணே  காட்டி  கொடுக்கிறதே 
காதல்  வழிகிறதே 
கண்ணில்  காதல்  வழிகிறதே 
உன்  விழியில்  வழியும்  பிரியங்களை 
பார்தேன்  கடன்தீன்  பகல்  இரவை 
உன்  அலாதி  அன்பினில் 
நனைந்த  பின்  நனைந்த  பின் 
நானும்  மழையானேன்  

[Female]
காலை  எழுந்ததும் 
என்  கண்கள்  முதலில் 
தேடி  பிடிப்பது  உந்தன்  முகமே 
தூக்கம்  வருகையில் 
கண்  பார்க்கும்  கடைசி 
கட்சிக்குள்  நிற்பது  உன்  முகமே 

[Male]
என்னை  பற்றி  என்கே  தெரியாத  பலவும் 
நீ  அறிந்து  நடப்பது  வியப்பேன்
உன்னை  ஏதும்  கேட்காமல் 
உன்னது  ஆசை  அனைத்தும் 
நிறைவேற்ற  வேண்டும்  என்று  தவிப்பேன்

[Female]
போகின்றேன்  என  நீ  பல  நூறு  முறைகள் 
விடை  பெற்றும்  போகாமல்  இருந்தாய் ...
சரி  என்று  சரி  என்று  உனை  போக  சொல்லி 
கதவோரம்  நானும்  நிற்க  சிரிப்பாய் 
கதவோரம்  நானும்  நிற்க  சிரிப்பாய் 

[Male]
காட்டி  கொடுக்கிறதே 
கண்ணை  காட்டி  கொடுக்கிறதே 
காதல்  வழிகிறதே 
கண்ணில்  காதல்  வழிகிறதே 

[Female]
ஒரு  அலையை  வந்து  எனை  அடித்தாய் 
கடலாய்  மாறி  பின்  எனை  இழுத்தாய் 

[Male]
உன்  அலாதி  அன்பினில் 
நனைந்த  பின்  நனைந்த  பின்  
நானும்  மழையானேன்  

[Male]
உன்னை  மறந்து  நீ  தூக்கத்தில்  சிரித்தாய்
தூங்காமல்  அதை  கண்டு  ரசித்தேன்  
தூக்கம்  மறந்து  நான் 
உன்னை  பார்க்கும்  காட்சி
கனவாக  வந்தது  என்று   நினைத்தேன் 

[Female]
யாரும்  மானிடரே  இல்லாத  இடத்தில 
சிறு  வீடு  கட்டி  கொள்ள  தோன்றும் 
நீயும்  நானும்  அங்கே  வாழ்கின்ற  வாழ்வை 
மரம்  தோறும்  செதுக்கிட  வேண்டும் 

[Male]
கண்  பார்த்த  கதைக்க  முடியாமல்  நானும் 
தவிக்கின்ற  ஒரு  பெண்ணும்  நீதான் 
கண்  கொட்ட  முடியாமல்   முடியாமல்  பார்த்தும் 
 சலிக்காத  ஒரு  பெண்ணும்  நீதான் 
சலிக்காத  ஒரு  பெண்ணும்  நீதான் 

[Female] 
பார்த்த  முதல்  நாளே 
உன்னை  பார்த்த  முதல்  நாளே 
காட்சி பிழை  போலே 
உணர்ந்தேன்    காட்சி  பிழை  போலே 
ஒரு  அலையை  வந்து  எனை  அடித்தாய் 
கடலாய்  மாறி  பின்  எனை  இழுத்தாய் 
என்  பாதகை  தாங்கிய 
உன்  முகம் உன்  முகம் 
என்றும்  மறையாதே 

டூயட் - அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி


அஞ்சலி  அஞ்சலி  புஷ்பாஞ்சலி
பூவே  உன்  பாதத்தில்  புஷ்பாஞ்சலி
பொன்னே  உன்  பெயருக்கு  பொன்னாஞ்சலி
கண்ணே  உன்  குரலுக்கு  கீதாஞ்சலி
கண்  காணா  அழகிற்கு   கவிதாஞ்சலி

(அஞ்சலி ...)

காதல்  வந்து  தீண்டும்  வரை  இருவரும்  தனித்தனி
காதலின்  பொன்  சங்கிலி  இணைத்தது  கண்மணி
கடலிலே  மழைவீழ்ந்தபின்  எந்தத்துளி  மழைத்துளி
காதலில்  அதுபோல  நான்  கலந்திட்டேன்  காதலி
திருமகள்  திருப்பாதம்  பிடித்துவிட்டேன்
தினமொரு  புதுப்பாடல்  படித்துவிட்டேன்
அஞ்சலி  அஞ்சலி  என்னுயிர்க்  காதலி


(பூவே ...)

சீதையின்  காதல்  அன்று  விழி  வழி  நுழைந்தது
கோதையின்  காதலின்று  செவி  வழி  புகுந்தது 
என்னவோ என்  நெஞ்சிலே  இசை  வந்து  துளைத்தது
இசை  வந்த  பாதை  வழி  தமிழ்  மெல்ல  நுழைந்தது
இசை  வந்த  திசை  பார்த்து  மனம்  குழைந்தேன்
தமிழ்  வந்த  திசை  பார்த்து  உயிர்  கசிந்தேன்
அஞ்சலி  அஞ்சலி  இவள்  தலைக்காதலி ...


பூவே  உன்  பாதத்தில்  புஷ்பாஞ்சலி
பொன்னே  உன்  பெயருக்கு  பொன்னாஞ்சலி
கண்ணே  உன்  குரல்  வாழ  கீதாஞ்சலி
கவியே  உன்  தமிழ்வாழ  கவிதாஞ்சலி

அழகியே  உனைப்போலவே  அதிசயம்  இல்லையே
அஞ்சலி  பேரைச்சொன்னேன்  அவிழ்ந்தது  முல்லையே
கார்த்திகை  மாதம்  போனால்  கடும்மழை  இல்லையே
கண்மணி  நீயில்லையேல்  கவிதைகள்  இல்லையே
நீயென்ன  நிலவோடு  பிறந்தவளா ?
பூவுக்குள்  கருவாகி  மலர்ந்தவளா ?
அஞ்சலி  அஞ்சலி  என்னுயிர்க்காதலி ...
(பூவே ...)

டூயட் - காதலே என் காதலே



என்  காதலே  என்  காதலே
என்னை  என்ன  செய்ய  போகிறாய்?
நான்  ஓவியன்  என்று  தெரிந்தும்  நீ
ஏன்  கண்ணிரண்டை  கேட்கிறாய்?
சிலுவைகள்  சிறகுகள் 
ரெண்டில்  என்ன  தர  போகிறாய் ?
கிள்ளுவதை  கிள்ளிவிட்டு
ஏன்  தள்ளி  நின்று  பார்க்கிறாய் ?
(என்  காதலே ...)
காதலே  நீ  பூ  எறிந்தால் 
எந்த  மலையும்  கொஞ்சம்  குழையும்
காதலே  நீ  கல்  எறிந்தால்
எந்த  கடலும்  கொஞ்சம்  கலங்கும்
இனி  மீள்வதா  இல்லை  வீழ்வதா ?
உயிர்  வாழ்வதா  இல்லை  போவதா ?
அமுதென்பதா  விஷம்  என்பதா ?
இல்லை  அமுத -விஷம்  என்பதா ?
காதலே  உன்  காலடியில்
நான்  விழுந்து  விழுந்து  தொழுதேன்
கண்களை  நீ  மூடிக்கொண்டே
நான்  குலுங்கி  குலுங்கி  அழுதேன்
இது  மாற்றமா  தடுமாற்றமா ?
என்  நெஞ்சிலே  பனி  மூட்டமா ?
நீ  தோழியா ? இல்லை  எதிரியா ?
என்று  தினமும்  போராட்டமா ?
என்  காதலே  என்  காதலே
என்னை  என்ன  செய்யப்  போகிறாய் ?
நான்  ஓவியன்  என்று  தெரிந்தும்  நீ
ஏன்  கண்ணிரண்டை  கேட்கிறாய் ?