சனி, 28 மே, 2011

கனா காணும் காலங்கள் - 7G ரெயின்போ காலனி

Singer: Harish Raghavendra, Madhumitha, Ustad Sulthan Khan


கனா  காணும்  காலங்கள் 
கரைந்தோடும்  நேரங்கள் 
கலையாதல்  கோலம்  போடுமா?
விழி  போடும்  கடிதங்கள் 
வழி  மாறும்  பயணங்கள் 
தனியாக  ஓடம்  போகுமா?

இது  இடைவெளி  குறைகிற  தருணம் 
இரு  இதயத்தில்  மெல்லிய  சலனம் 
இனி  இரவுகளின்  ஒரு  நரகம் , இளமையின்  அதிசயம் 
இது  கத்தியில்  நடந்திடும்  பருவம் 
தினம்  கனவினில்  அவரவர்  உருவம் 
சுடும்  நெருப்பினை  விரல்களும்  விரும்பும் , கடவுளின்  ரகசியம் 

உலகே  மிக  இனித்திடும்  பாஷை 
இதயம்  ரெண்டு  பேசிடும்  பாஷை
மெதுவா  இனி  மழை  வரும்  ஓசை  ஆஹ் ...
 (கனா  காணும்  காலங்கள் ...)

நனையாத  காலுக்கெல்லாம் , கடலோடு  உறவில்லை 
நான்  வேறு  நீ  வேறு  என்றால்  நட்பு  என்று  பேரில்லை 
பறக்காத   பறவைக்கெல்லாம்  பறவை  என்று  பெயரில்லை 
திறக்காத  மனதில்  எல்லாம்  களவு  போக  வழியில்லை 
தனிமையில்  கால்கள்  எதை  தேடி  போகிறதோ 
திரி  தூண்டி  போன  விரல்  தேடி  அலைகிறதோ 

தாயோடும்  சிறு  தயக்கங்கள்  இருக்கும் 
தோழமையில்  அது  கிடையாதே 
தாவி  வந்து  சில  விருப்பங்கள்  குதிக்கும் 
தடுத்திடவே  இங்கு  வழி  இல்லையே  ஆஹ் ...
 (கனா  காணும்  காலங்கள் ...)

இது  என்ன  காற்றில்  இன்று  ஈர  பதம்  குறைகிறதே 
ஏகாந்தம்  பூசிக்கொண்டு  அந்தி   வேலை  அழைக்கிறதே 
அதி  காலை  நேரம்  எல்லாம் , தூங்காமல்  விடிகிறதே 
விழி  மூடி  தனக்குள்  பேசும்  மௌனங்கள்  பிடிக்கிறதே 
நடை  பாதை  கடையில்   உன்  பெயர்  படித்தால் 
நெஞ்சுக்குள்  ஏனோ  மயக்கங்கள்  பிறக்கும் 

பட  படப்பாய்  சில  கோபங்கள்  தோன்றும் 
பனி  துளியாய்  அது  மறைவது  ஏன்?
நிலா  நடுக்கம்  அது  கொடுமைகள்  இல்லை 
மன  நடுக்கம்  அது  மிக  கொடுமை 
 (கனா  காணும்  காலங்கள்...)

நன்றி 
http://www.mohankumars.com/

வெள்ளி, 27 மே, 2011

சக்கரை நிலவே - யூத்

சக்கரை  நிலவே  பெண் நிலவே 
காணும்  போதே  கரைந்தாயே .
நிம்மதி  இல்லை  ஏன்  இல்லை  நீ  இல்லையே
(2)
மனம்  பச்சை  தண்ணீ  தான்  பெண்ணே
அதை  பற்ற  வைத்து  உன்  கண்ணே
என்  வாழ்கை  என்னும்  கட்டை  எரித்து
குளிர்   காய்ந்தாய்  கொடுமை  பெண்ணே
கவிதை  பாடின  கண்கள்
காதல்  பேசின  கைகள்
கடைசியில்  எல்லாம்  பொய்கள்
என்  பிஞ்சு  நெஞ்சு  தாங்குமா ?

(
சக்கரை  நிலவே .........)

காதல்  என்று  ஒன்று  ஒரு  குழந்தை  போல
வாயை  மூடி  அழுமே  சொல்ல  வார்த்தை  இல்லை 
அன்பே  உன்  புன்னகை  எல்லாம்  அடி  நெஞ்சில்  சேமித்தேன்
கண்ணே  உன்  புன்னகை  எல்லாம்  கண்ணீரை  உருகியதே  
வெள்ளை  சிரிப்புகள்  உன்  தவறா?
அதில்  கொள்ளை  போனது  என்ன  தவறா?
பிரிந்து  சென்றது  உன்  தவறா ?
அதை  புரிந்துகொண்டது  என்ன  தவறா ?
ஆண்  கண்ணீர் பருகும்  பெண்ணின்  இதயம்  சதையல்ல  கல்லின் 
சுவரா ?

(
கவிதை  பாடின...........)

நவம்பர்  மாத  மாலையில்  நான்  நனைவேன்  என்றேன் 
எனக்கும்  கூட  நனைதல்  மிக  பிடிக்கும்  என்றாய்
மொட்டை  மாடி  நிலவில்  நிலவில்  நான்  குளிப்பேன்  என்றேன்
எனக்கும்  அந்த  குளியல்  மிக  பிடிக்கும்  என்றாய்
சுகமான  குரல்  யார்  என்றால்  சுசீலா வின்  குரல்  என்றேன்
எனக்கும்  அந்த  குரலில்  ஏதோ  மயக்கம்  என  நீ  சொன்னாய் 
கண்கள்  மூடிய  புத்தர்  சிலை  என்  கனவில்  வருவது 
பிடிக்கும்  என்றேன்
தாயகம்  என்பது  சிறிதும்  இன்றி
அது  எனக்கும்  எனக்கும்  தான்  பிடிக்கும்  என்றாய்
அடி  உனக்கும்  எனக்கும்  எல்லாம்  பிடிக்க  என்னை  என்  பிடிக்காதென்றாய்

(
சக்கரை  நிலவே...........)