சனி, 20 ஆகஸ்ட், 2011

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது ஸ்ரீனிவாசின் குரலில்




 பூவுக்கெல்லாம்  சிறகு முளைத்தது  எந்தன் தோட்டத்தில்
 விண்மீன்  எல்லாம்  நிலவாய்  போனது  எந்தன் வானத்தில் 


 முப்பது நாளும்  முகூர்த்தமானது  எந்தன் மாதத்தில்


 முள்ளில் கூட தேன்துளி  கசிந்தது  எந்தன் ராகத்தில் 
இது  எப்படி  எப்படி  நியாயம்
எல்லாம்  காலம்  செய்த  மாயம் 
இது  எப்படி  எப்படி  நியாயம் 
எல்லாம்  காதல்  செய்த  மாயம்  

பூவுக்கெல்லாம்  சிறகு  முளைத்தது  எந்தன்  தோட்டத்தில் 
விண்மீன் எல்லாம்   நிலவாய்  போனது  எந்தன்  வானத்தில் 


(interlude)
நிலவை  பிடித்து  எறியவும்  முடியும் 
நீல  கடலை  குடிக்கவும்  முடியும் 
காற்றின்  திசையை  மாற்றவும்  முடியும் 
கம்பனை  முழுக்க  சொல்லவும்  முடியும் 


I love you, love you சொல்லத்தானே 
ஐயோ  என்னால்  முடியவில்லை 


சுற்றும்  உலகின்  திட்டம்  தெரியும் 
சூரியன்  பூமி  தூரமும்  தெரியும் 
கங்கை  நதியின்  நீளமும்  தெரியும் 
வங்க  கடலின்  ஆழம்  தெரியும் 


காதல்  என்பது  சரியாய்  தவறா
இதுதான்  எனக்கு  தெரியவில்லை 


(beautiful interlude)


ஒற்றை பார்வை  உயிரை  குடித்தது 
கற்றை  குழல்  கைது  செய்தது 
மோதும்  ஆடை  முத்தமிட்டது 
ரத்தம் எல்லாம்  சுட்டுவிட்டது 


I love you, love you சொல்லத்தானே 
ஐயோ  என்னால்  முடியவில்லை


மீண்டும்  வசந்தம்  எழுந்தவிட்டது 
மீண்டும்  சோலை  குளிர்ந்துவிட்டது 
இதயம்  இதயம்  மலர்ந்துவிட்டது 
இசையின்  கதவு  திறந்துவிட்டது 


காதல்  என்பது  சரியாய்  தவறா 
இதுதான்  எனக்கு  தெரியவில்லை 


பூவுக்கெல்லாம் 


பூவுக்கெல்லாம்   சிறகு  முளைத்தது  எந்தன்  தோட்டத்தில் 


 விண்மீன்  எல்லாம்  நிலவை  போன்றது  எந்தன்  வானத்தில் 
 முப்பது  நாளும்  முகூர்த்தமானது   எந்தன் மாதத்தில்


முள்ளில்கூட  தேன்துளி  கசிந்தது  எந்தன்ராகத்தில்


 இது  எப்படி  எப்படி ஞாயம் 
எல்லாம்  காலம்  செய்த  மாயம்  
இது எப்படி எப்படி ஞாயம்
எல்லாம்  காதல்  செய்த  மாயம்

செவ்வாய், 12 ஜூலை, 2011

காதல் கொண்டேன் என் தேவதையை கண்டேன் - யுவன் ஸ்பெசல்


தேவதையை  கண்டேன்  காதலில்  விழுந்தேன் 
என்  உயிருடன்  கலந்துவிட்டாள்
நெஞ்சுக்குள்  நுழைந்தாள்  மூச்சினில்  நிறைந்தாள்
என்  முகவரி  மாற்றி  வைத்தாள்
ஒரு  வண்ணத்து  பூச்சி  எந்தன்  வழிதேடி  வந்தது 
அதன்  வண்ணங்கள்  மட்டும்  இங்கு  விரலோடு  உள்ளது 
தீக்குள்ளே  விரல்  வைத்தேன் 
தனித்தீவில்  கடை  வைத்தேன்
மணல்  வீடு  கட்டி  வைத்தேன்
(தேவதையை  கண்டேன் ...)
தேவதை  தேவதை  தேவதை  தேவதை
அவள்  ஒரு  தேவதை  தேவதை  தேவதை  (2)
விழி  ஓரமாய்  ஒரு  நீர்  துளி 
வழியுதே  என்  காதலி 
அதன்  ஆழங்கள்  நீ  உணர்ந்தால் 
போதும்  போதும்  போதும்
அழியாமலே  ஒரு  ஞாபகம் 
அலை  பாயுதே  என்ன  காரணம் 
அருகாமையில்  உன்  வாசம்  வீசினால்  சுவாசம்  சூடேறிடும் 
கல்லறை   மேலே  பூக்கும்  பூக்கள் 
கூந்தலை  போய்  தான்  சேராதே 
எத்தனை  காதல்  எத்தனை  ஆசை 
தடுமாறுதே  தடம்  மாறுதே 
அடி  பூமி   கனவு  உடைந்து  போகுதே 
(தேவதையை  கண்டேன் ...)
தோழியே  ஒரு  நேரத்தில் 
தோழிலே  நீ  சாய்கையில் 
பாவியாய்  மனம்  பாழை 
போகும்  போகும்  போகும்
சோழியாய்  என்னை  சுழற்றினாய் 
சூழ்நிலை  திசை  மாற்றினாய் 
கானலாய்  ஒரு  காதல்  கண்டேன்
கண்ணை  குருடாக்கினாய் 
காற்றினில்  கிழியும்  இலைகளுக்கெல்லாம் 
காற்றிடம்  கோபம்  கிடையாது 
உன்னிடம்  கோபம்  இங்கு  நான்  கொண்டால் 
எங்கு  போவது  என்ன  ஆவது 
எந்தன்  வாழ்வும்  தாழ்வும்  உன்னை  சேர்வது 
(தேவதையை  கண்டேன் ...)


புதன், 29 ஜூன், 2011

அரபு நாடே அசந்து நிற்கும் யுவன் பாட்டிற்கு



அர்தமே  தேகோ
வாஹன்  ஏக்
அசிக்  கமல்  ஹே
உர்டுகே  ஷாயத்
காலி  கீ  வொஹ்
கோயி  காசல்  ஹாய்
லகிலாலாஹில்லா 
லகிலாலாஹில்லா 
லகிலாலாஹில்லா 
லகிலாலாஹில்லா
முகத்தை  எப்போதும்
மூடி  வைக்காதே
எனது  நெஞ்சத்தில்
முல்லை  தைக்காதே 
என்  கண்மணி
காதோடு  சொல்
உன்  முகவரி  ஒஹ்
எந்நாளுமே  என்  பாட்டுக்கு
நீ  முதல்  வரி
ஹேய்  ஹேய்  ஹேய்
முகத்தை  எப்போதும்
மூடி  வைக்காதே 
எனது  நெஞ்சத்தில்
முல்லை  தைக்காதே
அரபு  நாடே
அசந்து  நிற்கும்
அழகியா  நீ
உருது  கவிஞன்
உமர்கயாமின்  கவிதையா
ஹேய்  ஹேய்  ஹேய்  ஹேய்

ஹேய்
உன்னுடைய  நெற்றி
உன்னை  பற்றி  கூறுதே ...
உள்ளிருக்கும்  பொட்டே
உந்தன்  குட்டே
சொல்லுதே
என்னுடைய  பார்வை
கழுகு  பார்வை
தெரிஞ்சிக்கோ
எனக்கிருக்கும்  சக்தி
பரா சக்தி  புரிஞ்சிக்கோ
கால்  கொலுசு தான்
கல  கலக்குது
கையின்  வளையல்  காது
குளிர
கானம்  பாட
ஹேய்  ஹேய்
லகிலாலாஹில்லா 
லகிலாலாஹில்லா 
லகிலாலாஹில்லா 
லகிலாலாஹில்லா 
முகத்தை  எப்போதும்
மூடி  வைக்காதே
எனது  நெஞ்சத்தில்
முல்லை  தைக்காதே
போட்டிருக்கும்  கோஷா
வேஷம்  பேஷா
பொருந்துதே
பெண்ண  அழகு   மொத்தம்  காண
சித்தம்  விரும்புதே
வெண்ணிலவின்  வேகம்
ஓடும்
மேகம்  விலகுமா
வண்ண  உடல்  யாவும்
காணும்
யோகம்  வைக்குமா
கொஞ்சம்  கொழுப்பு
கொஞ்சம்  திமிரு
எனக்கும்  இருக்கு
உனக்கு  மேலே
அன்பு  தோழி
ஹேய்  ஹேய்
லகிலாலாஹில்லா 
லகிலாலாஹில்லா 
லகிலாலாஹில்லா 
லகிலாலாஹில்லா 
முகத்தை  எப்போதும்
மூடி  வைக்காதே
எனது  நெஞ்சத்தில்
முல்லை  தைக்காதே
அரபு  நாடே
அசந்து  நிற்கும்
அழகியா  நீ
உருது  கவிஞன்
உமர்கயாமின்  கவிதையா
ஹேய்  ஹேய்  ஹேய்
முகத்தை  எப்போதும்
மூடி  வைக்காதே
எனது  நெஞ்சத்தில்
முல்லை  தைக்காதே
என்  கண்மணி
காதோடு  சொல்
உன்  முகவரி  ஒஹ்
எந்நாளுமே  என்  பாட்டுக்கு
நீ  முதல்  வரி
ஹேய்  ஹேய்  ஹேய்
முகத்தை  எப்போதும்
மூடி  வைக்காதே
எனது  நெஞ்சத்தில்
முல்லை  தைக்காதே 
லகிலாலாஹில்லா 
லகிலாலாஹில்லா 
லகிலாலாஹில்லா 
லகிலாலாஹில்லா