வெள்ளி, 28 நவம்பர், 2008

ஆபத்தான கடல்பகுதி அரபி கடல் பகுதியா ? இல்லை இந்திய பெருங்கடல் பகுதியா?

இலங்கை அகதிகள் இந்தியாவுக்குள் வரும்போது அவர்களை சோதனை எனும் பெயரில் சூறையாடும் இந்திய கடற்படை கப்பல்கள் ,பாக்கிஸ்தான் கயவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைகையில் என்ன செய்து கொண்டிருந்த.

பாகிஸ்தானின் நிலவரம் சில மாதங்களாக கலவரமாக உள்ளபோது அங்கு தற்சமயம் வலுவானவர்கள் தீவிரவாதிகள் என்பதை நமது உளவு துறை உணராதது ஏன் என்ற வினா தற்சமயம் வலுத்துள்ளது.

இலங்கையில் வாழும் நம் தமிழ் சகோதர சகோதிரிகள் இங்கு உயிர் பிழைக்க ஓடி வருவது தான் நமது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ,இந்த கொடியவர்கள் வருகை பற்றி நமக்கு கவலை இல்லை என்று கடற்படை எண்ணியது ஏன்?

வெளிநாட்டு பயணிகளை பிணை கைதிகளாய் வைத்து நம்மை மிரட்டி தம் காரியத்தை நிறைவேற்ற துடிக்கும் இந்த கயவர்கள் நம் எல்லைக்குள் நுழைய காரணம் இந்த கடற்படையின் அலட்சிய போக்கே .

ஒரு நாட்டு கடற்படையின் முக்கிய பணியே தம் நாட்டு கடற்பரப்பில் அந்நியர் நுழைவதை தடுப்பதும் ,தம் நாட்டை சேர்ந்த தேச விரோதிகள் கடற்பரப்பை துஷ்பிரோயோகம் செய்யா வண்ணம் காப்பதும் ஆகும்.

இதனை செய்ய தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.சுமார் 150 பேர் உயிரிழக்க காரணம் கொலை வெறி பிடித்த தீவிரவாதிகள் அல்ல ,அவர்கள் இங்கு நுழைய காரணமாய் இருந்த அதிகாரிகளே.தீவிரவாதிகள் எப்போது வாய்ப்பு கிட்டும் இந்திய மக்களின் உயிரோடு விளையாடலாம் என்று காத்துகிடக்கும் கொடியவர்கள் என்பது நாம் அறிந்ததே!

நஞ்சினும் கொடிய அப்பகைவரிடத்து நம் அப்பாவி மக்களை ஒப்படைத்த இந்த கடற்படையை இன்னும் எந்த பதிவரும் சாடதது ஏன்?முதற்கட்டமாக அந்த பிராந்திய தளபதியை பதவி நீக்கம் செய்து ,அவர் மீது விசாரணை நடத்தி அவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

தீவிரவாதம் பாகிஸ்தானில் தான் இருக்கிறது என்ற ஒபாமாவின் கூற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்களை கைது செய்ய இன்டர்போல் பாகிஸ்தானில் நுழைய வேண்டும் .அந்நாட்டின் அணு சக்தி வளங்கள் எங்கே யார் கண்காணிப்பில் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும்.

இதை விடுத்து இங்கு வாழும் நம் சகோதர இஸ்லாமியர்களை பழி கூறும் அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு நடக்க வேண்டாம்.

அன்பை போதிக்கும் நம் மதங்களின் பண்பை உணராது
அரசியல் போதிக்கும் ஆந்தைகளின் பேச்சை கேட்டு
மனிதம் காப்பது நம் முதல் கடமை.
என்பதை மறந்து மனிதம் அழிப்பதை
மகத்தான செயலாய் கருதும் இந்த
மடையர்கள் திருந்த அருள்செய் இறைவா.

என்று இறைவனை வேண்டி இந்த மிருகங்கள் மனிதர்களாக வேண்டும் என்று கோருவதை தவிர வேறு வழி ஒன்று உண்டென்றால் அது நாம் அவர்களை அழிப்பது ஒன்றேயாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக