வியாழன், 25 டிசம்பர், 2008

2008ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்














சிறந்த சுழல் பந்துவீச்சாளர் :அஜந்தா மென்டிஸ்


சென்ற ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இவரது நிலைப்பாடு

3 போட்டிகளில் பங்கேற்று 26 விக்கெட்டுகளை 18.38 எனும் சராசரியோடு கைப்பற்றியுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் இவரது செயற்பாடு

18 போட்டிகளில் பங்கேற்று 48 விக்கெட்டுகளை 10.12 எனும் சராசரியோடு கைபற்றி அசத்தியுள்ளார்.

கிரிக்கெட்டினுள் நுழையும்போதே தன் திறமை முழுவதையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தி ஜொலித்த மென்டிஸ் தான் இந்த ஆண்டின் மிக சிறந்த பந்து வீச்சாளரும் ஆவார்.

சிறந்த வேக பந்து விச்சாளர்கள்:
இந்த துறையில் இந்த ஆண்டு பலர் ஜொலித்து உள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்ரிக்காவின் டேல் ஸ்டைன் ,இந்தியாவின் ஜாகிர் கான் ,இஷாந்த் சர்மா ,பாகிஸ்தானின் தன்வீர்,இங்கிலாந்து அணியின் பிளின்டாப் ,ஆஸ்திரேலியாவின் லீ ,ஜான்சன் என இந்த பட்டியல் நீளும்.சில வீரர்களை நான் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம்.

இவர்களுள் என்னை கவர்ந்தவர் ஜாகீர் கான்.



இவர் தனது இழந்த மீட்டதோடு நில்லாமல் வேகபந்து வீச்சுக்கு ஒத்துழைக்காத இந்திய மைதானங்களிலும் அசத்த கூடிய அளவிற்கு முன்னேறியுள்ளார்.அனுபவ வீரராக இவர் பிற வீரர்களின் பந்து வீச்சில் காணப்படும் குறைகளையும் களைந்து அணிக்கு உற்சாகம் ஊட்டுகிறார். பிறரையும் நல்லவிதமாக செயல் பட தூண்டும் இவரே இந்த ஆண்டின் சிறந்த வேக பந்து வீச்சாளர் ஆவார்.

சிறந்த பீல்டர்கள் :
யுவராஜ் சிங்:ஸ்டைலான தோரணை பாண்டியான இவர பத்தி சொல்லவே வேணாம். பந்த பிடிக்க இவர் எடுக்குற ரிஸ்க் சூப்பர்.


சுரேஷ் ரெய்னா : இந்தியாவின் மிக அற்புதமான பீல்டர்களில் ஒருவர்.தனது திறமைக்கு ஏற்ப துடிப்பாக பீல்டிங் செய்யும் இவர் என் கனவு அணியில் நிரந்தரமானவர்.

இங்கிலாந்து அணியின் காலிங்க் வூட்டின் பீல்டிங் அற்புதம் முப்பத்திரெண்டு வயதிலும் இவரது பீல்டிங் கங்காருவை நியாபக படுத்துகிறது.


சிறந்த விக்கெட் கீப்பர்கள்:
ஆடம் கில்க்ரிஷ்டின் விலகலுக்கு பிறகு சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்பதில் இந்தியாவின் தோனி ,தென்னாப்ரிக்காவின் பௌச்சர் ,இலங்கையின் சங்கக்கரா ஆகியோரிடேயே பலத்த போட்டி நிலவுகிறது. இனி வரும் காலங்களில் தான் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என தெரிய வரும்.
 

சிறந்த டெஸ்ட் மட்டையாளர் :
இந்தியாவின் அதிரடி துவக்க வெட்டு சேவக் தான் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் மட்டையாளர். இந்த குவித்துள்ள ரன்கள் 1492 ஆகும்.



சிறந்த ஒரு நாள் போட்டி மட்டையாளர்:

கவுதம் காம்பிர் தான் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி மட்டையாளர் ஆவார்.

சிறந்த அனைத்து ஆட்டக்காரர் :
ஜார்கண்ட் சிங்கம் டோணிதான் அவர்.



இந்த ஆண்டின் சிறந்த வீரர் கவுதம் காம்பிர் ஆவார்.

வரவங்க ஓட்ட போட்டு தாக்குங்கோ!


வெள்ளி, 28 நவம்பர், 2008

ஆபத்தான கடல்பகுதி அரபி கடல் பகுதியா ? இல்லை இந்திய பெருங்கடல் பகுதியா?

இலங்கை அகதிகள் இந்தியாவுக்குள் வரும்போது அவர்களை சோதனை எனும் பெயரில் சூறையாடும் இந்திய கடற்படை கப்பல்கள் ,பாக்கிஸ்தான் கயவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைகையில் என்ன செய்து கொண்டிருந்த.

பாகிஸ்தானின் நிலவரம் சில மாதங்களாக கலவரமாக உள்ளபோது அங்கு தற்சமயம் வலுவானவர்கள் தீவிரவாதிகள் என்பதை நமது உளவு துறை உணராதது ஏன் என்ற வினா தற்சமயம் வலுத்துள்ளது.

இலங்கையில் வாழும் நம் தமிழ் சகோதர சகோதிரிகள் இங்கு உயிர் பிழைக்க ஓடி வருவது தான் நமது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ,இந்த கொடியவர்கள் வருகை பற்றி நமக்கு கவலை இல்லை என்று கடற்படை எண்ணியது ஏன்?

வெளிநாட்டு பயணிகளை பிணை கைதிகளாய் வைத்து நம்மை மிரட்டி தம் காரியத்தை நிறைவேற்ற துடிக்கும் இந்த கயவர்கள் நம் எல்லைக்குள் நுழைய காரணம் இந்த கடற்படையின் அலட்சிய போக்கே .

ஒரு நாட்டு கடற்படையின் முக்கிய பணியே தம் நாட்டு கடற்பரப்பில் அந்நியர் நுழைவதை தடுப்பதும் ,தம் நாட்டை சேர்ந்த தேச விரோதிகள் கடற்பரப்பை துஷ்பிரோயோகம் செய்யா வண்ணம் காப்பதும் ஆகும்.

இதனை செய்ய தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.சுமார் 150 பேர் உயிரிழக்க காரணம் கொலை வெறி பிடித்த தீவிரவாதிகள் அல்ல ,அவர்கள் இங்கு நுழைய காரணமாய் இருந்த அதிகாரிகளே.தீவிரவாதிகள் எப்போது வாய்ப்பு கிட்டும் இந்திய மக்களின் உயிரோடு விளையாடலாம் என்று காத்துகிடக்கும் கொடியவர்கள் என்பது நாம் அறிந்ததே!

நஞ்சினும் கொடிய அப்பகைவரிடத்து நம் அப்பாவி மக்களை ஒப்படைத்த இந்த கடற்படையை இன்னும் எந்த பதிவரும் சாடதது ஏன்?முதற்கட்டமாக அந்த பிராந்திய தளபதியை பதவி நீக்கம் செய்து ,அவர் மீது விசாரணை நடத்தி அவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

தீவிரவாதம் பாகிஸ்தானில் தான் இருக்கிறது என்ற ஒபாமாவின் கூற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்களை கைது செய்ய இன்டர்போல் பாகிஸ்தானில் நுழைய வேண்டும் .அந்நாட்டின் அணு சக்தி வளங்கள் எங்கே யார் கண்காணிப்பில் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும்.

இதை விடுத்து இங்கு வாழும் நம் சகோதர இஸ்லாமியர்களை பழி கூறும் அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு நடக்க வேண்டாம்.

அன்பை போதிக்கும் நம் மதங்களின் பண்பை உணராது
அரசியல் போதிக்கும் ஆந்தைகளின் பேச்சை கேட்டு
மனிதம் காப்பது நம் முதல் கடமை.
என்பதை மறந்து மனிதம் அழிப்பதை
மகத்தான செயலாய் கருதும் இந்த
மடையர்கள் திருந்த அருள்செய் இறைவா.

என்று இறைவனை வேண்டி இந்த மிருகங்கள் மனிதர்களாக வேண்டும் என்று கோருவதை தவிர வேறு வழி ஒன்று உண்டென்றால் அது நாம் அவர்களை அழிப்பது ஒன்றேயாகும்.


வியாழன், 27 நவம்பர், 2008

குண்டு வெடிப்புக்கு அஞ்சி ஓடுகிறதாம் இங்கிலாந்து .பேச்ச குறைங்கப்பா !

அய்யோ சாமி ! எனக்கு சிரிக்க தெம்பில்லை ,நம்மக்கிட்டே அடி வாங்க முடியாம பின்னங்கால் பொடனியில் அடிக்க தலை தெறிக்க நம்மள்ட்ட இருந்து தப்பிச்சு ஓட இங்கிலாந்துக்கு காரணம் கிடைச்சுடுட்சு !

குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லையாம் !இது வரை இவர்கள் நாட்டில் எல்லாம் குண்டு வெடிப்பே நிகழ்ந்தது இல்லையா ?

ஆசிய நாடுகள் என்றாலே இங்கிலாந்து,ஆஸ்திரேலியா,நியுசிலாந்து போன்ற வெள்ளையர் நாடுகளுக்கு இளக்காரம் .ஏற்கனேவே இவர்களை வைத்து மினி உலக கோப்பை தொடரை நடத்தி தனது நிதி நிலையை சீராக்க நினைத்த பாகிஸ்தானுக்கு இவர்கள் வைத்த ஆப்பு நாம் அறிந்ததே!

பாகிஸ்தானில் நிலைமை மோசம்தான் எனினும் முறையான பாதுகாப்பு கோருவதை விடுத்து ,நாங்கள் விளையாடமாட்டோம் என்றால் எப்படி ?

நம்முடைய நாட்டில் விளையாடுவதை ரத்து செய்துவிட்டு இவர்கள் வெளியேறுவது நமது மானத்தை வாங்குவது போல் தானே உள்ளது .
இவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத அளவிற்கா நம் நாடு உள்ளது.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பாதுகாப்பு விசயத்தில் எவ்வளோவோ வேறுபாடு உள்ளது .இந்தியர்கள் தம் உயிரை கொடுத்தாவது தம் விருந்தினர் உயிரை காப்பரே ஒழிய ,அவர்கள் உயிர் அழிவதை வேடிக்கை பார்க்க மாட்டர்கள்.

குண்டு வைத்த கயவர்களை கூடிய விரைவில் நமது போலிசார் கைது செய்வர்.இது போல் அவர்களது நாட்டில் நடக்குமா ,இவர்கள் நமது நாட்டினரையே தீவிரவாதிகள் என்று கூறியவர்கள் தானே!

ஸ்மித் தலைமை வகிக்காத தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துவிட்டு இங்கு வாய் பேசிக்கொண்டு வந்து வாங்கி கட்டிகொண்டார்கள்.சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு இவர்கள் இந்தியா வருவார்கள் ,வேறு எதற்கு பணத்தை வேற எங்க இவங்க கண்ல காட்ட போறாங்க !

இவங்க வந்துட்டு போனதுனால ஒரு வழியா யுவராஜும் ,சேவாக்கும் பார்முக்கு திரும்பிட்டாங்க !அதுவரைக்கும் நமக்கு சந்தோசம் .இவர்களோடு பயிற்சி போட்டி விளையாட நினைத்த இந்தியாவுக்கு தான் பேட்லக் .விளையாடமுடியமா போச்சு .

சச்சின் டெண்டுல்கரின் உயிருக்கு மேலா இவர்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. தீவிரவாதிகள் அவரது உயிருக்கு விலை வைத்த பின்னரும் தன் நாட்டிற்காக போட்டியில் பங்கேற்க பலமுறை பாகிஸ்தான் சென்று வந்துள்ள அவரது துணிவு இந்த சின்ன பசங்களுக்கு வராது.

இந்திய வீரர்களுக்கு பல முறை இமெயில் மூலமும் தொலைபேசி வழியாகவும் வந்துள்ள மிரட்டல்களை கண்டு இந்தியர்கள் என்றும் அஞ்சியதில்லை .காரணம் நாம் இந்த மண்ணில் சுதந்திர காற்றை சுவாசிக்க பட்ட கஷ்டங்களை விடவா இந்த மிரட்டல்கள் பெரிது என்ற நம் துணிவுதான்.

இப்படிப்பட்ட துணிவை இங்கு நம்மிடம் தோற்றோடும் இந்த பரங்கியரிடம் எதிர்பாக்க முடியுமா .நம்மிடம் தோற்பதை ஏற்க இயலாமல் நம் மீது பழி போடுதல் ,களத்தில் கண்ணிய குறைவாய் நடத்தல்,நிறவெறி கொண்டு உடன் விளையாடுபவர்களை சீண்டுதல்,என்று விளையாட்டு வீரர்களுக்கு ஆகாத செயல்களை புரிந்து வெற்றிமாலை சூடுவது தான் இவர்களது பிறவி குணம் .

இவர்களிடம் எல்லாம் நம்மை அவமான பட செய்த அந்த கயவர்கள் நம் கண்ணில் கிடைத்தால் அவர்களை விசாரணையின்றி தூக்கில் இட வேண்டும்.பாவம் !உயிர் பயம் அனைவருக்கும் உள்ளதுதானே.

இவர்களை சொல்லி என்ன பயன்.கடந்த நான்காண்டுகளில் இது தான் மிக பெரிய குண்டு வெடிப்பு என்று கூறுமளவுக்கு நிகழ்ந்த இந்த பயங்கரத்தை கண்டு இவர்கள் அஞ்சுவதை குறை சொல்ல முடியாது.

அதி சீக்கிரத்தில் குற்றவாளிகளை கைது செய்து இவர்கள் மத்தியில் நமது பலத்தை நிலை நாட்டுவதில் தான் நமது நாட்டின் கவுரவம் அடங்கியுள்ளது.
ஜெய் ஹிந்த்!


திங்கள், 24 நவம்பர், 2008

திருப்பரங்குன்றத்தில் பலர் பார்க்காத அமைதியான அழகிய மலைகோவில் காசிவிஷ்வநாதர் ஆலயம் .

நேற்று கல்லூரியில் செமஸ்டர் தேர்வு முடிந்த பிறகு நண்பர்கள் மற்றும் நண்பிகளோடு திருப்பரங்குன்றத்திற்கு சென்றோம். திருமங்கலம் பகுதியை சேர்ந்த தோழி மலைக்கு பின் புறம் உள்ள மலை கோவிலுக்கு போகலாம் என்றாள்.நாங்கள் செல்லும் வேளையில் மழை தன் வேலையை காட்டிகொண்டிரிந்தது.

நாங்கள் கோவிலுக்கு சென்ற சாலையில் நாங்கள் மட்டுமே தனியே போய்கொண்டிரிந்தோம் .எனக்கு உள்ளுக்குள் திகிலாய் இருந்தது இருந்தாலும் வழக்கம்போல் உடன் வருபவர்களை கலாய்த்து கொண்டு சென்றேன்.

ஏற்கனேவே கோவையில் மருதமலை ,அனுவாவி சுபரமனியர் கோவில் போன்ற இடங்களுக்கு நான் சென்றிருக்கிறேன்.நான் மதுரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலை எப்படி தவற விட்டேன் என தெரியவில்லை .அழகர் கோவில் ஒன்றுதான் மதுரையில் இயற்கை எழில் சூழ்ந்த இடம் என நான் நினைத்திருந்தது என்னுடைய தவறு என்பதை காசி விச்வநாதர் ஆலயம் கூறுவதை போல் கோவிலுக்கு எதிரே அமைந்திருந்த கண்மாய் பசுமையாக காட்சியளித்தது.
மலை அடிவாரத்தில் ஒரு கடை கூட இல்லாமல் அமைதியாக இருந்தது அனுவாவி கோவிலை நினைவு படுத்தியது.படியேறுவதற்குள் கால்கள் தளர்ந்து போய் விடுமோ என்று என்ன தோன்றும்படி செங்குத்தான படிகள் பள்ளிகட்டு சபரி மலைக்கு என்னும் பாடலை நினைவு படுத்தியது.

மழை பெய்ததால் மலையின் வழியே வழிந்தோடிவந்த மழை நீர் பார்க்க நன்றாக கண்களுக்கு குளுமையாக இருந்தது.சாரல் மழையின் நடுவே நனைந்து கொண்டு அந்த படிகளின் வழியே ஏறினோம் .வழியில் ஆங்காங்கு இருந்த பாறைகளின் மேல் நின்று நண்பர்கள் புகைப்படம் எடுத்து கொண்டோம்.

பெண்கள் தனியே தத்தம் தோழிகளுடன் புகை படம் எடுத்து கொண்டனர் .
நாங்கள் மழை காலத்தில் செல்லும்போதே மலை ஏறுவது கடினமாக இருக்கிறது .வெயில் காலத்தில் இங்கு சென்று திரும்புவது மிக கடினம்.குடிநீருக்காக போடப்பட்ட பல குழாய்கள் நம் மக்களின் கைங்கரியத்தால் காணாமல் போய் விட்டன .

தண்ணீருக்காக மிகவும் சிரமபட்டோம் கடைசியில் மலை மீது இருந்த ஒருகடையில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கினோம்.குடிக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவலம் என்று மாற போகிறதோ!

இப்படி பலவித தடங்கல்கள் இருந்தாலும் மலையேறும் பொது உடன் வந்த நண்பர்களுடன் சந்தோசமாக பேசி சிரித்தபடி மலை ஏறியது நல்ல அனுபவமாக இருந்தது.சீன மொபைல்களில் நம் தமிழ் படங்களின் பாடல்களை கேட்டு கொண்டே ரசித்தபடி அவரவர் கோணங்களில் ஏதோ மிக பெரிய சினிமா விமர்சகர் போல் திரை படங்களை பற்றி விவாதித்து கொண்டு சென்றோம்.

கோவிலுக்கு செல்லும்போதாவது இது போல் திரைப்படங்களை பற்றி பேசாது செல்வது நம்மால் முடியாதோ என்று தோன்றுகிறது.மலையில் நிறைய மரங்கள் இல்லை என்றபோதும் குளிர் கொடைக்கானலை நியாபகப்படுத்தியது.

மொத்தம் அறநூறு படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் என் முழங்கால் உயரம் இருந்தது .ஏறி இறங்கியதும் ஒன்றும் தெரியவில்லை .இன்றுதான் தொடை வலிக்க ஆரம்பித்துள்ளது.

  இவ்வளவு சிரமத்தின் நடுவேயும் மேலே சென்று இறைவனை கண்டவுடன் மனதில் ஏற்பட்ட அமைதியை சொல்ல வார்த்தைகள் இல்லை .அமைதி தவழும் அன்னை விசாலாட்சியின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

இப்படி மிகவும் மகிழ்ச்சியாய் எங்கள் பயணம் அமைந்தது .மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் திருபரங்குன்றத்திற்கு செல்ல நேர்ந்தால் சரவண பொய்கை அருகேயுள்ள இதனை காண தவறாதிர்கள் .

வரவங்க இந்த கோவில் குறித்து பலர் தெரிந்து கொள்ள ஓட்டு போட்டு இந்த பதிவ பாப்புலர் ஆக்குங்க!

காட்டடி சேவாக்கும் கம்பீர காம்பீரும்

 இந்திய அணியின் இரட்டை குழல் துப்பாக்கிகளாக துவக்கத்தில் அதிர்வேட்டு போடும் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் நட்சத்திரங்களான சேவாக் மற்றும் காம்பீர் இணை என் உள்ளம் கவர் கொள்ளையர்கள் ஆவர்..
டெண்டுல்கர் ,கங்குலி இணைக்கு பிறகு இந்த இணையின் ஆட்டம் படு ஜோர் .எப்பொழுதும் பந்தை உடைக்க வேண்டும் என்ற வெறியோடு அடிக்கும் சேவாக்கும் டெக்னிக்கலாக விளையாடும் காம்பிரும் அருமையான ஒரு துவக்கத்தை இந்திய அணிக்கு வழங்குகிறார்கள் .
 
20 - 20 உலக கோப்பை வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இந்த இணை நமக்கு அளித்த அபாரமான அதிரடி துவக்கமே எனில் அது மிகை ஆகாது.நியுசிலாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் இந்தியா தோற்றது .எனினும் அந்த போட்டியில் இந்த இணையின் போராட்டம் குறிப்பிடத்தக்கது .
இந்த இணையில் இருவரும் பந்துக்கு பந்து ரன் குவிப்பதை மட்டுமே கணக்கில் கொண்டு அதிரடியாக ஆடுகின்றனர்.இந்த இணையின் அதிரடி சரவேட்டால் சென்ற ஐ.பி.எல்.தொடரை டெல்லி அணிதான் கைப்பற்றும் என பலர் கூறியது குறிப்பிடத்தக்கது.இருந்தாலும் அற்புதமான வீரரான வார்னேவின் ராஜஸ்தான் ராயல்ஸ் இதை வென்றது ஏற்று கொள்ள கூடியதே .

  இயல்பாகவே இடக்கை மற்றும் வலக்கை இணையை பிரிப்பது மிக கடினம்,அதிலும் இந்த இணை ஒரு படி மேலே போய் எந்த ஒரு கடின பந்து வீச்சையும் ஒரு கை பார்க்கின்றனர் .தேர்வாளர்களால் உள்ளே வெளியே என பந்தாடப்பட்ட காம்பிர் தற்சமயம் தனது பேட்டிங் அணுகு முறையை மாற்றி வெற்றி கண்டிருக்கிறார் .அவர் முன்பு அணிக்கு வந்த போது தற்போது விளையாடுவதற்கு முற்றிலும் மாறாக அனைத்து பந்துகளிலும் அதிரடியாக விளையாட முற்பட்டு தனது விக்கெட்டை இழந்துவிடுவார்.

இவர்களது இணை சராசரி மற்ற துவக்க சாதனை சராசரிகளை விட மிக அதிகம் .இவர்களது வயது மிக குறைவு எனவே இந்த சாதனைகளின் அளவு கூடும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை .இவர்களுக்கு இடையிலான புரிதல் மற்ற எந்த இணைகளுக்கும் நடுவே இல்லை என்பது நிச்சயம்.

உலகின் புகழ் பெற்ற மற்றொரு இணையான ஆடம் கில்க்ரிஸ்ட்,ஹெய்டன் இணையின் ஆட்டம் இவர்களுக்கு இணையான ஆட்டம் இல்லை என்பது என் கருத்து.காரணம் என்னவெனில் அவர்கள் பயிற்சியின் போது உலகின் முதல் நிலை பந்து வீச்சாளர்களின் பந்துக்களை எதிர்கொண்டிப்பர் .அதன் காரணமாகவே நான் இந்திய தொடக்க வீரர்களான சச்சின் ,கங்குலி மற்றும் சேவாக் ,காம்பிர் இணைகள் சிறந்தவை என்கிறேன்.

சேவாக் முன்னாள் தமிழக வீரர் ஸ்ரீ காந்தை போல் அதிரடியாக விளையாடுகிறார் என என் நண்பர் ஒருவர் கூறினார் ,இதில் மாற்று கருத்துக்கே இடமில்லை . ரவி சாஸ்திரி பந்துகளை வீணடிக்கும் நேரத்தில் ஒரு முனையில் பந்துகளை துவைத்து எடுக்கும் ஸ்ரீகாந்த் தான் சச்சின்,சேவாக் இருவருக்கும் முன்னோடி என்பது என் கருத்து.

இந்திய இணைகளில் மிக சிறந்தது கங்குலி, சச்சின் இணை என்பதில் எவ்வித அய்யமும் இல்லை .அதற்கடுத்த மிக சிறந்த இணை இவர்களே.  கங்குலியின் ரசிகரான காம்பீரும் ,சச்சினின் சீடரான சேவாக்கும் இந்திய அணிக்கு அடுத்த உலக கோப்பையை கைபற்றி தர போகும் வெற்றி நாயகன் டோனிக்கு போர் படை தளபதிகளாக விளங்குவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .  

இருவரும் இப்படி இருந்தாலும் சச்சினின் டெக்னிகலான ஆட்டம் காம்பீரிடம்தான் வெளிப்படுகிறது,இதற்கு மாறாக சேவாக்கிடம் கங்குலியின் அதிரடி தன்மை காணப்படுகிறது .இவர்கள் ஜோடி சேர்ந்த குறுகிய காலத்துக்குள் பல முறை நூறு ரன்களுக்கு மேல் இணை ரன் குவிப்பாக குவித்துள்ளனர்.

இவர்களிடம் சிக்கிக்கொண்டு எதிரணி பந்து வீச்சாளர்கள் படும் பாடு பார்க்க பரிதாபமாய் இருக்கிறது.நேற்றைய போட்டியில் ஆண்டர்சனின் பந்துகளை ஏதோ அறிமுக பந்து வீச்சாளரின் பந்தை போல் பிரித்து மேய்ந்தனர்.இவர்களுக்கு இடையே காணப்படும் புரிதல் தான் இவர்கள் வெற்றிக்கு காரணம் என்பது என் கருத்து.

அதிரடி துவக்கம் தர இவர்கள் ,பிறகு நடு வரிசையில் வானவேடிக்கை காட்ட யுவராஜ் ,விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்த ரெய்னா ,அணிக்கு தேவையான ஆட்டத்தை வழங்க காப்டன் தோனி ,திறமைசாலி ரோஹித் சர்மா ,அணிக்கு கூடிய விரைவில் திரும்பவுள்ள சூடு காட்டும் உத்தப்பா என இந்தியாவின் பேட்டிங் படை உள்ளது.

இந்திய மண்ணில் இந்த சிங்ககளுக்கு போட்டியாக வரும் அணி அனேகமாக இலங்கையாகத்தான் இருக்க போகிறது .மென்டிஸ் மற்றும் முத்தையாவை எதிர்கொள்வதில் தான் இந்த அணி திணறுகிறது என்பது என் கருத்து .இந்த நல்ல நிலை உலக கோப்பை வரை நீடிக்க வேண்டும் இந்திய மக்கள் அனைவரது ஆசை .

ஆஸ்திரேலியா தற்போது உள்ள நிலையில் அது மீண்டும் வலுவடைய சில ஆண்டுகளாகும் .வார்னே ,மெக்ராத் ,கில்க்ரிஸ்ட் ,கில்லேச்பி போன்ற ஜாம்பவான்களின் இடத்தை நிரப்புவது சாதரண காரியம் அல்ல .நல்ல நிலையில் அறிமுகம் ஆன ஜான்சன் ,டைட் போன்றவர்கள் தற்சமயம் சொதப்பி வருகின்றனர் .எனினும் இவர்கள் தொடரின்போது நல்ல நிலையில் இருந்தாலும் இவர்களது பந்து வீச்சு இந்திய மைதானங்களில் எடுபடுமா என்பது சந்தேகமே !

இப்படி மற்ற அணிகள் இருக்க இந்தியாவோ இங்கு பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.இங்கிலாந்திற்கு எதிரான தொடரை முற்றிலும் கைபற்றும் வண்ணம் இவர்களது ஆட்டம் பட்டையை கிளப்புகிறது .

இவர்கள் இந்த நிலையிலேயே இருக்கும் பட்சத்தில் தோனி டெவில்ஸ் கோப்பையை கைபற்றுவது உறுதி.

வரவங்க ஓட்ட போட்டு தாக்குங்கோ சாமியோ !


சனி, 22 நவம்பர், 2008

தோனி கங்குலியை குறை கூற இவர்கள் யார்

இன்னைக்கு காலையிலே செய்திதாள்களில் விளையாட்டு பகுதியில் என்னை எரிச்சலாக்கியது , தோனி பதவி விலகபோவதாக தேர்வு குழுவினரை மிரட்டுகிறார் என்ற செய்திதான் .

ஒரு விசயத்தில் விவாதிக்கும்போது திடீரென இவ்வாறு பேசுவது இயல்பே .
அதை ஏதோ உடனே தோனி பதவி விலகபோவது போல் பெரிய பிரச்சனை ஆக்கிய புண்ணியவான்களை என்ன சொன்னாலும் திருந்த போவது இல்லை .

இதிலும் தினமலர் ஒரு படி மேலே போய் இந்த விஷயம் வெளியாக காரணம் முன்னால் காப்டன் கங்குலி தான் காரணம் என்று புது சர்ச்சையை கிளப்புகிறது .

இவர்களது கற்பனை செய்திகளாலே நல்ல நிலையில் விளையாடி கொன்டிரிந்த கங்குலி ஒய்வு முடிவை எடுத்தார் என்பது என்னுடைய கருத்து.
டோனியோ அணியின் ஒற்றுமை இந்த செய்திகளால் பாதிக்கப்பட்டுவிடுமோ என பயபடுகிறார்.

பதான் தன்னை அவருக்கு எதிரானவர் என என்னிவிடுவாரோ என்று அஞ்சுகிறார் .டோனியின் கூற்றில் நியாயம் இருக்கிறது .பிறகு ஒருவர் தனக்கு எதிராக செயல்படுவதாக ஒருவர் கருதிவிட்டால் அவரின் தலைமையின் கீழ் விளையாட யோசிப்பார் .இது அணியில் பெரும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

அணியின் ஒற்றுமையை குலைக்கும் இது போன்ற நிகழ்வுகளை எந்தவொரு காப்டனும் விரும்பமாட்டார்.இவர்கள் மேலும் ஆர்.பி .சிங்கிர்க்காக தோனி வாதாடுவதை ஏன் இவ்வளவு பெரிய விஷயம் ஆக்கினார்கள் என தெரியவில்லை .

ஆர்.பி.சிங்20 ஓவர் உலக கோப்பையை பெற்று கொடுத்தவர்களில் முக்கியமானவர் .அவரது திறமையின் மீதிருந்த நம்பிக்கையின் காரணமாகவே தோனி அவரை தேர்வு செய்வதில் உறுதியாக இருந்திருக்கவேண்டும் .

மேலும் அவர் தற்போது நல்ல நிலையில் உள்ள பதானையும் அணியில் தேர்வு செய்வதில் உறுதியாக இருந்திருக்கிறார் என்பதை ஏன் இந்த பத்திரிகைகள் வெளியிட வில்லை .

ஒரு முக்கியமான தொடர் நடைபெற்று கொண்டு இருக்கும் வேளையிலா இப்படியொரு செய்தி வெளியிட்டு அவர்களது ஒற்றுமையை குலைக்கவேண்டும்.பத்தாதற்கு வங்க புலி கங்குலியையும் இழுத்துவிட்டார்கள்.

டோனிக்கும் கங்குலிக்கும் பணிபோராம் அதனால் கங்குலிதான் இதை வெளியிட்டாராம் .என்ன கொடுமை இது !டோனியை அணிக்குள் அறிமுகப்படுத்தி அவர் பிரகாசிக்க முடியாமல் தினரியபோதும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து அவரது திறமையை வெளிக்கொணர காரணமாக இருந்த இருவருள் கங்குலியும் ஒருவர் என்பது நாமறிந்தே ஒன்றே .அப்படிப்பட்ட கங்குலிக்கு எதிராக தோனி செயல்படுகிறாராம் .

டோனியோ கங்குலியோ அப்படி செயல்படபோவது இல்லை ;ஆனால் அவர்கள் இந்த மீடியாக்களால் எதிரிகள் ஆவது உறுதி . கங்குலி இன்றைய இளம் இந்திய அணியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் .இவரின் தலைமையின் கீழ் இந்திய அணியில் நுழைந்த இளைஞர்கள் விபரம் விரேந்திர சேவக் ,
யுவராஜ் சிங் ,
கைப் ,
பதான் ,
ஆர்.பி.சிங் ,
ஸ்ரீ சாந்த்,
தினேஷ் கார்த்திக்,
தோனி,
காம்பீர்,
ரெய்னா ,
பார்த்திவ் படேல்
என இவரது தலைமையில் அணியில் இடம்பிடித்த இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம் . இவருக்கு எதிராக அணியில் தற்போதுள்ள இளம் வீரர்கள் யாரும் எதுவும் பேச மாட்டார்கள் என்பது உறுதி .

இப்படி எதிர்காலத்தை எண்ணி அதற்குயேற்ப அணியை உருவாக்கிய அவர் கொஞ்சம் முன்கோபி என்பதை வைத்து இந்த மீடியாக்கள் விளம்பரம் தேடி கொள்கின்றன.

டோனியை கங்குலியை போன்ற வீரர்களை குறை கூறுவதை இனியாவது பத்திரிகைகள் தவிர்க்கவேண்டும் .

புதன், 19 நவம்பர், 2008

எங்க சங்கத்து சார்பா உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவைக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

தோழர் அறிவிழி கலகக்காரர்களை கண்டித்து இட்ட பதிவில் வந்த பின்னுட்டங்களை நான் பதிவாக இட்டுள்ளேன்
நன்றி அறிவிழி



மதுரைக்காரன் சொன்னது…

நீங்க மட்டும் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க எங்க சங்கத்து சார்பா உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவைக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

பெயரில்லா சொன்னது…

\\ சில நாட்களுக்கு முன்னர் உசிலம்பட்டிப் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் அப்பகுதியில் உள்ள கடைகளில் மேல் கல் வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர். \\

இப்படி நடந்ததா?

திருப்பூரான் சொன்னது…

எதற்கெடுத்தாலும் பொது மக்களைத் தாக்குவது என்பதுதான் இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது.

துபாய் கணேஷ் சொன்னது…

உங்களின் கோபமும், ஆதங்கமும் சரிதான்.

இராகவன், நைஜிரியா சொன்னது…

இவர்கள் கல் வீசுவது, அரசு பேருந்துகளை நோக்கி மட்டும்தான். தனியார் பேருந்துகளை நோக்கி வீச மாட்டார்கள். அது மாதிரி, கலகத்தின் போது, சாதாரண மக்களின் வாகனங்கள் மட்டும் எரிக்கப்படும். இது மட்டும் எப்படி சரியாக நட்கின்றது எனப்புரியவில்லை. இராகவன், நைஜிரியா

ஆட்காட்டி சொன்னது…

திருப்பி அடிச்சா சரியாகும்.

ஆசப் படுறவன் சொன்னது…

நல்ல கருத்த எழுதுனா ஆட்டோ பரிசா தருவிங்களா?

பஸ்சுல கல் எருஞ்சவன் சொன்னது…

ஆமா ஆட்டோவும் தருவோம் , அது நெறைய ஆளுகளையும் தருவோம்

கனடா சுபா சொன்னது…

சண்ட போடுறவங்க அவங்களுக்குள்ள தான் போட்டுக்கிரனும் தவிர மக்களை தொந்தரவு செய்யக் கூடாது.

பெயரில்லா சொன்னது…

"சாது மிரண்டா காடு கொள்ளாது " ஆனா சாது எப்பவுமே மெரலவே மெரலாதுங்க.

குடிகாரன் சொன்னது…

ஆட்டோவ நல்ல வெலக்கி வித்துட்டு, அந்த ஆளுகளை எல்லாம் அல்லக்கை வேலைக்கு வச்சிக்கோ தல...

தனித்தமிழ் சங்கம் சொன்னது…

ஆட்டோ என்ற சொல்லை ஆட்சேபிக்கிறோம்

குடிகாரன் சொன்னது…

வந்துட்டான்யா வந்துட்டான்யா..........

கேப்டன் படை சொன்னது…

அய்யா ஆட்டோக்கு தமில்ல என்னனு சொல்லணுங்க....

தனித்தமிழ் சங்கம் சொன்னது…

ஆட்டோவை முன்று சக்கர பயணிகள் வாடகை ஊர்தி அப்படின்னு சொல்லுங்க......

கேப்டன் படை சொன்னது…

போயா டுபாக்கூரு போன தபா உன் பேச்சைக் கேட்டுகுனு டீக் கடையில போயி டீக்குப் பதிலா கொட்டை வடி நீர்னு கேட்டு எல்லாப் பேரும் சேந்து பின்னிட்டானுங்க...

குடிகாரன் சொன்னது…

என்னாது கொட்டை வடி நீர் கேட்டயா? அடிக்கிரதோட உன்ன விட்டாங்களே?

யோசிப்பவன் சொன்னது…

ஏங்க அதான் டீக்கு தேநீர் அப்படின்னு ஒரு பெயர் இருக்கே?

தனித்தமிழ் சங்கம் சொன்னது…

தேநீர் என்பதை விட கொட்டை வடி நீர் என்பதே சரியான தமிழ் சொல்.

குடிகாரன் சொன்னது…

இன்னும் நீ இங்கேதான் இருக்கையா?

கேப்டன் படை சொன்னது…

அய்யா தனித்தமிழ், உன்ன்னோட அட்ரஸ் கொடுயா, அய்யயோ மன்னிச்சுக்கோ முகவரி கொடுப்பா

தனித்தமிழ் சங்கம் சொன்னது…

யாதும் ஊரே யாவரும் கேளிர்

குடிகாரன் சொன்னது…

ஏன்யா அட்ரஸ் கேட்டா கெட்ட வார்த்த சொல்லி திட்டுற,

தனித்தமிழ் சங்கம் சொன்னது…

அது கெட்ட வார்த்தை இல்லை தோழரே, தமிழ் பழமொழி . உங்களிடம் வந்து தமிழ் பேச சொன்னது என்னுடைய தவறுதான் அய்யா.

கேப்டன் படை சொன்னது…

அப்பிடி ஒதுங்கி ஓடீறு , "தமிலன் என்று சொல்டா தல நிமிந்து நில்லடா " அப்படின்னு ஏங்க கேப்டன் சொல்லிருக்காரு. என்கிட்ட மோதாத

அறிவிழி சொன்னது…

அனானி தோழர்களே இந்தப் பதிவை நான் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைக்காக எழுதியுள்ளேன் , எனவே உங்கள் கும்மிகளை எனது வேறு காமெடிப் பதிவுகளில் வைத்துக் கொள்ளலாமே..
நன்றி தோழர்களே உங்கள் பங்களிப்பிற்கு.....

பெயரில்லா சொன்னது…

இவர்களுக்கும் அப்பாவி பொதுமக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்.

செவ்வாய், 18 நவம்பர், 2008

வெற்றி நாயகன் டோனி

இன்றைய விளையாட்டு துறையில் வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் ஆகிவிட்டது .மரியா சரபோவா ,சானியா மிர்சா,லியாண்டர் பயஸ் ,டேவிட் வில்லா,சுக்ராஜ் சிங் ,யுவராஜ் சிங் என வீரர்கள் காயத்தால் அவதிப்படுவது
நாம் அறிந்ததே .

கிரிக்கெட் சமிபகாலமாக அதிகளவில் விளையாடப்பட்டு வருகிறது .
இப்படிப்பட்ட சூழலில் அதிக ஆட்டங்களில் பங்கேற்பதற்காக சென்ற ஆண்டில் நமது கேப்டன் டோனி சென்று வந்துள்ள பயண தூரத்தையும் கேட்டால் நம்மால் நம்ப இயலவில்லை .

கடந்த பதினைந்து மாதங்களில் ஐந்து கண்டங்களில் எட்டு நாடுகளுக்கு கிட்டத்தட்ட ஐம்பது விமானங்களில் 112,000 கிலோமீடேர்கள் பயணம் செய்து
47 ஒரு நாள் போட்டிகள் ,11 டெஸ்ட் போட்டிகள் ,8 இருபது ஓவர் ஆட்டங்கள் என பல போட்டிகளில் பங்கேற்று கலக்கியுள்ளார் .

இவர் இத்தனை போட்டிகளில் பங்கேற்று கலக்கியுள்ளார் என்பது சாதரண விடயம் அல்ல .டெஸ்ட் போட்டிகளில் கூட இவர் விளையாடாமல் தவிர்க்கலாம் .ஆனால் இவர் இல்லாத ஒரு நாள் அணி மாலுமி இல்லாத கப்பல் போல் தவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இத்தனை போட்டிகளிள் பங்கேற்பதில் என்ன விந்தை என சிலர் கேட்கக்கூடும் .
ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .உலகிலேயே கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இந்தியா ஒரு நாட்டின் தலைவர் பதவிதான் மிகவும் கடினமானது .உடன் விளையாடும் வீரர்கள் ,ரசிகர்கள்,வாரியத்தை என பலரது விருப்பங்களை பூர்த்தி செய்யவேண்டும் .

இத்தனை போட்டிகளில் சில போட்டிகளில் விளையாடும்போது அவரது கைவிரல்களில் காயம் ஏற்பட்டபோதிலும் ,ஓய்வின்றி தொடர்ந்து ஆடினார்
என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து அவரது சகா ராபின் உத்தப்பா கேட்டபோது டோனி சிறிது கொண்டாரம்.

இவை தான் அந்த வீரனின் வெற்றி ரகசியங்கள் .அவர் அதிர்சடத்தால் வெற்றி பெறுவதாக கூறுபவர்கள் ,அவரது கடின உழைப்பால்தான் அதிர்ஷ்டம் அவர் வசபட்டுள்ளது என்பதை உணரவேண்டும்.

ஆஸ்திரேலிய தலைவர் பாண்டிங் வழக்கம்போல் தனது அணியின் தோல்வியை ஏற்று கொள்ள இயலாமல் நமது அணியின் இருபது ஓவர் உலக கோப்பை வெற்றியையும் குறை கூறி தன் யார் என்பதை மீடியாகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் .இதனால் டோனியின் புகழ் குறைய போவது இல்லை மாறாக பெருகுகிறது.

இந்தியாவில் பெருநகரங்களில் வாழ்பவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த கிரிக்கெட்டுக்குள் பின்தங்கிய மாநிலமான ஜார்கண்டில் இருந்து வந்து இன்று இந்தியாவின் மிச்சல் பெவன் என கூறும் அளவிற்கு பெயர் பெற்றுள்ள ஒரு கூலி தொழிலாளியின் மகனது வெற்றி உழைக்கும் வர்கத்திற்கு கிடைத்த வெற்றி.
மிஸ்டர் கூலாக களத்தில் இருக்கும் தோனி பதட்டப்படாமல் ஆட்டத்தை தான் வெல்வதற்கான களமாக எளிதில் மாற்றிவிடுகிறார் .

இதனாலேயே இவருக்கு முன் அணிக்கு வந்த யுவராஜுக்கு அணி தலைவர் பதவி கிடைக்காமல் இவருக்கு கிடைத்தது. அணிக்கு தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவரது திறமை இவரது சராசரியை பார்த்தாலே தெரியும் .
சரியான விக்கெட் கீப்பர் கிடைக்காமல் அவதிப்பட்ட இந்திய அணிக்கு இவர் வருகை புது தெம்பை அளித்தது.

கங்குலிக்கு பிறகு அணிக்கு வெற்றி தேடி தரும் ஒரு வலுவான தலைவனாக தோனி உருவெடுத்துள்ளார் எனில் அது மிகை ஆகாது.கபில் டெவில்ஸ் போன்று தற்சமயம் டோனியின் இளைஞர் படை உலகின் எந்த அணியையும் நொறுக்கி தள்ளும் வண்ணம் வலுவாக உள்ளது.

அவரது தலைமை பண்பிற்கு சிறந்த உதரணமாக ஐபிஎல் தொடரில் தனக்கு கிடைத்த சராசரி வீரர்களை கொண்டு இறுதி போட்டி வரை சென்றதை கூறலாம்.
ஃபார்ம் இன்றி தவித்த ரெய்னாவை அதிரடி ஆட்டகாரராக மாற்றி அவரை மேட்ச் வின்னராக மாற்றிய பெருமை தோனியையே சாரும்.

இந்தியாவில் எந்த ஒரு டெஸ்ட் காப்டனும் பெறாத சிறப்பு டோனிக்கு உண்டு அது தான் தலைமை பொறுபேற்ற பின் முதல் மூன்று ஆட்டங்களையும் தொடர்ந்து வென்றதுதான் அது .

இப்படி சிறப்பு வாய்ந்த இளைங்கர் படை தலைவர் தோனி இந்தியாவுக்கு 1983 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பையை பெற்று தரட்ட்ம் என்று இறைவனை வேண்டுவோம் .

வரவங்க டோனியோட புகல பரப்ப எனக்கு ஒட்டு போடுங்கோ .

வெள்ளி, 24 அக்டோபர், 2008

தீபாவளியும் எனது பாவமும்

எனது மனசாட்சியின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் பொருட்டு இந்த சம்பவத்தை உங்களிடம் கூறி ஆறுதல் தேட விழைகிறேன் .
என் தந்தை 3 வயது குழந்தையாக இருந்த போதே அவரது அப்பா இறந்து விட்டாராம் .அதன் பிறகு எனது அப்பா ,சித்தப்பா ,அத்தை ஆகியோரை எனது
பாட்டியும் அவரது தாயும் இணைந்து மிகுந்த சிரமத்திர்க்கிடேயே வளர்த்தர்கலாம்.
என் அப்பா மிகுந்த போக்கிரிதனதுடன் ,கிராமத்து வாலிபர்களுக்கேயுரிய குறும்புடன் சேட்டைகள் செய்வாராம்.
இப்படி ஒரு முறை என் சித்தப்பாவால் என் அப்பா ஒருவரை அடித்து ரத்த காயம் ஆகிவிட்டதாம் .இதனால் என் அப்பாவை திருத்தும் பொருட்டு அவர்கள் பிறந்த ஊரான தஞ்சையிலிரிந்து மதுரைக்கு அழைத்து வந்தார்களாம் .
இங்கு வந்த பிறகு அச்சக தொழிலை தன் மாமாவின் மூலமாக என் அப்பா கற்று கொண்டார் .பிறகு மாமா தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வேறு ஊருக்கு சென்று விட்டார் .பிறகு என் பாட்டி எங்கள் வீட்டில் சிறிது காலம் இருந்தார் .
எங்கள் வறுமையை நீக்கும் பொருட்டும் எனது கல்வி செலவுகளை சமாளிக்கும் பொருட்டும் வயது முதிர்ந்த நிலையிலும் வீட்டு வேலைக்கு சென்றார் .
பிறகு நான் எங்கள் குடும்ப வறுமை காரணமாக ,என் படிப்பை பாதியில் விட நேர்ந்தது .பிறகு என் அத்தை என்னை படிக்க வைப்பதாக கூறி கோவைக்கு அழைத்தார்கள் .இதற்கு காரணம் எனது பாட்டிதான்.
அவர் என்னை படிக்க வைக்கும் பொருட்டு எனது அத்தை அவர்களிடம் எடுத்து கூறி அவர்களை சம்மதிக்க வைத்திருக்கிறார் .இதை தொடர்ந்து நான் மறுபடியும்
பள்ளி செல்ல தொடங்கினேன் .
இவ்வாறு நான் கோவையில் இருந்த காலத்தில் எனது பாட்டி உடல்நிலை சரியில்லாமல் போனது .அதை தொடர்ந்து எனது பாட்டி மதுரைக்கு என் பெற்றோரால் அழைத்து செல்லப்பட்டார் .
இந்நிலையில் அவரது ஆசைப்படி என் சித்தப்பா வீட்டிற்கு அவரை என் அப்பா அழைத்து சென்று விட்டுரிக்கிறார் .அங்கு என் பாட்டி மிகவும் உடல்நலம் குன்றி காணப்ட்டதல் சித்தப்பா அவரை அருகே இருந்த அவரது அத்தை வீட்டில் விட்டு இருக்கிறார் .
இந்நிலையில் தீபாவளிக்காக அங்கே இருந்த எனது தாய் வழி பாட்டி வீட்டிற்கு சென்ற நான் அங்கே அருகே இருந்த எனது சித்தப்பா வீட்டிற்கு செல்லாமல் வந்து விட்டேன்.
அதன் பிறகு ஒரு மாதம் கழித்து நான் என் பாட்டி இறந்தபோது ஊருக்கு சென்ற போது அங்கிருந்தோர் கூறிய விஷயம் என்னை வேதனைக்கு உள்ளாக்கியது.
தீபாவளி அன்று நாங்கள் யாராவது அவருக்கு உடைகள் ,பலகாரங்கள் கொண்டு வருவோம் என்று வாசலிலேயே காத்து இருந்திருக்கிறார் .
இதை இன்று நினைத்தாலும் நான் வெட்கபடுகிறேன்.நான் மனிதன் என்று கூற எனக்கு அருகதை இல்லை .

புதன், 22 அக்டோபர், 2008

ஆண் பெண் நட்பு

இன்றைய உலகில் ஆண் பெண் நட்பாக இருப்பது எவ்வளவு கடினம் என்பதை வாழ்கையில் நேரடியாக உணர்ந்தவன் நான்.நான் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவன் .என்னுடன் 12 சகோதரிகள் பயில்கின்றனர் .அட,வேற ஒண்ணுமில்ல ,என்கூட படிக்கிற பிள்ளைகளைதான் சொல்றேன் .
எனக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்ல அதனாலே தான் இப்படி சொல்றேன் .
நான் இப்படி நினைச்சாலும் என் நண்பர்கள் சிலர் என்னை புரிந்து கொள்ள மறுக்கின்றனர் .எனது நண்பன் ஒருவனும் என்னை போலவே ஒரு நல்ல நண்பனாக பெண்களிடத்திலும் ஆண்களிடத்திலும் பழகுகிறான் .
எங்களை புரிந்து கொள்ளாமல் நெருங்கிய நண்பன் ஒருவன் எங்களை கடலை பார்ட்டிகள் என்று கூறுகிறான் .
இப்படி சொல்லாதே ,என்று நாங்கள் மறுத்து கூறியதற்கு எங்களை புரிந்து கொள்ளாமல் இனி எங்களிடம் பேசமாட்டேன் என்று கூறிவிட்டான் .
இதில் என்ன ஒரு வேடிக்கை எனில் அவன் எனது மற்றொரு நண்பனிடம் ஆறு வருடங்களாக பலகிவருபவனாம் .அவன் என்னிடம் வேதனை பொங்க கூறியது
" ஆறு வருடங்களாக பழகியும் என்னை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுகிறானே, ஆனால் முன்று மாதங்கள் பழகிய நீங்கள் புரிந்து கொள்வதை கூட அவன் புரிந்து கொள்ள மறுக்கிறானே "என்று அவன் பெண்களிடமும் என்னிடமும் கூறியபோது நான் நொந்துவிட்டேன் .
இந்த பிரச்னை இப்படி என்றால் என் நண்பன் ஒருவன் பயிலும் பொறியியல் கல்லூரி ஒன்றின் கொடுமை இன்னும் மோசம் .ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் இருவருக்கும் தலா 500 ரூபாய் அபராதமாம் .
இது போன்ற நிகழ்வுகள் உண்மையில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் .நாளைய சமுகத்தில் இப்படிப்பட்ட முறையில் வளர்ந்த இளைஞர்கள் எப்படி அலுவலகம் போன்ற இடத்தில் மற்றவர்களோடு தொடர்பு கொள்ள இயலும் .
காதல் ,நட்பு என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை இன்னும் சில ஜந்துகள் புரிந்து கொள்ளாமல் ,நட்பாக பழகும் பெண்ணிடம் காதல் கடிதம் நீட்டி தங்கள் நட்பை கொச்சை படுத்தி ,அந்த பெண்ணின் மனதையும் வடுவாக்குகின்றனர்.
இப்படி பட்ட ஒருசில ஆண்களால் பெண்ணிடத்தில் ஒரு ஆண் பேசினாலே அதற்கு கண் காது மூக்கு வைத்து இந்த சமுகம் கதை எழுதிவிடுகிறது .
பெண்ணை ஒரு போக பொருளாக பார்க்கும் இந்த ஆணாதிக்க சமுகத்தின் பார்வை என்று மாறுமோ!
ஒரு பெண் தன்னிடம் செல்போனில் பேசினாலே ,அவளை தன் ஆள் என்பது எவ்வளவு பெரிய கேவலம் .நான் உண்மையாக காதலிப்போர் யாரையும் குறை சொல்லவில்லை .கல்லூரிக்கு வருவதே காதலிக்கதான் என்று ஊடகங்களில் வருவதை நம்பும் சில ஜென்மங்களை நம்மால் ஒன்றும் செய்ய இயலாதது நமது துர்பாக்கியமே .
இதிலும் ஒரு சில காதல் மன்னன்கள் மிக பிரபலம் .நான் ஆறு பேரை காதலிக்கிறேன் .நான் உன்னை விட பெரிய ஆள் ,பத்து பேரை காதலிக்கிறேன் .
இப்படி பேசி கொள்வதில்தான் இவர்களுக்கு எவ்வளவு இன்பம் .
எனக்கு தெரிந்தவரை தமிழகத்தில்தான் ஊர்சுற்றும் போக்கிரிகளையும் ,உதவாக்கரைகளையும் ,வெட்டி ஆப்பிசர்களையும் பெண்கள் விரும்புவதாக அறிகிறேன் .இங்கு அமைதியை விரும்புபவரை யாரும் விரும்புவதில்லை .
நட்பு ,காதல் என்பனவற்றைவிட நமது பெற்றோர்தான் முக்கியம் என்றுர்ந்தோர் மிக குறைவு .நமது பெற்றோரின் ஆசை ,கனவு போன்றவற்றை
நிறைவேற்றுவதில்தான் அவர்களது மகிழ்ச்சி ஒளிந்துள்ளது.